×

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் தொழிற்பயிற்சி பள்ளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், ஜன.7: அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கான கிளாஸ்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் தொழிலை உற்பத்தி மற்றும் சேவையாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சேவையில் வருவதால் அரசாங்கம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் நடத்துபவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள் பொதுவான வளர்ச்சி மையத்தை உருவாக்கி பயன்பெறலாம். பொதுவான வளர்ச்சி மையத்தை சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடங்களில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் திருச்சி மண்டல அலுவலர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன துணை இயக்குனர் தயாளன், திருச்சி சிறுதொழில் வளர்ச்சி நிறுவன கிளை மேலாளர் பிரான்சிஸ் நோயல், அரியலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, அரியலூர் மாவட்ட தொழில் மைய கூடுதல் நிர்வாக பொறியாளர் ஜனனி சென்னை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டான்பஸ்கோ ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தினை பற்றி விளக்க உரையாற்றினார். மேலும் இதில் கலந்து கொள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து பதில் அளித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur, ,Perambalur District ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐல் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு